மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு கூடுதல் விலை அறிவித்துள்ளது 2300 முதல் 2320 அதாவது சன்ன ரகம்., பொதுரகம் இதுக்கு அனுப்பி இருக்காங்க விலை போதாது என மன்னார்குடியில் ஏ .ஐ .டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர்
ஏ .ஐ .டி.யூ.சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட சிறப்பு பேரவை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி சந்திரகுமார் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் கொள்முதல் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பணிமுதிர்ச்சி பட்டியல் படி பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் கூறுகையில் மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு கூடுதல் விலை அறிவித்துள்ளது 2300 முதல் 2320 அதாவது சன்ன ரகம்., பொதுரகம் இதுக்கு அனுப்பி இருக்காங்க இது போதாது விலை ரொம்ப குறைவு எம்.எஸ். சாமிநாதன் கமிஷன் என்ன உற்பத்தி செலவுகளோடு சேர்த்து இன்னும் அரை பங்கு சேர்த்து விலையை நிர்ணயிக்கும். நேரடி கொள்முதல் நிலையத்தில் உள்ள கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் தான் ஊழல் செய்கிறார்கள் என எங்கு பார்த்தாலும் சொல்லி வருகிறார்கள் ஆனால் அவர்கள் காரணம் இல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கு மேலே இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செருமங்கலம் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த போது தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சுமை தூக்கும் பணியாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ 10 பத்து ரூபாய் உயர்த்தி வழங்கிய பிறகு கொள்முதல் நிலையத்தில் அங்க நடக்குற அந்த விவசாயி கிட்ட பணம் வாங்குவதை குறைக்கலாம் என பார்த்தா அது குறையவே இல்லை அதற்கு காரணம் லாரி மாமூல் அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு எவ்வளவு என கேட்பது ஒரு கிலோ எடை குறைந்தால் கூட அந்த கொள்முதல் பணியாளர்கள் கட்ட வேண்டும் அவர் 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறவர்கள் ரூ 1 லட்சம் கட்டினால் தான் அடுத்த சீசனுக்கு வேலை என சொல்லும் போது இந்த ஊழலை அரசாங்கமே நடைமுறைப்படுத்தி வருகிறது அதிகாரிகள் தமிழ்நாடு அரசு இதனை வெளிப்படையாக சில விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யபடும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் செமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்று விட்டால் பணியாளர்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இருக்காது கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் மூட்டையை அடுக்கி வைப்பதால் மூட்டைக்கு அரை கிலோ, 1கிலோ என குறையும் அந்த தொகையை முழுவதும் அதிகாரிகள் தொழிலாளர்கள் தலையில் வைத்தால் அதற்கான பணத்தை விவசாயிகளிடம் தான் கேட்பார்கள் நேரடி நெல் கொள்முதல் நிலயத்திற்கு பணிக்கு சென்றால் நேர்மையாக பணியாற்ற முடியவில்லை அனைத்து பிரச்சனைக்கும் கொள்முதல் பணியாளர் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் என கூறி கொண்டு அதிகாரிகள் தப்பித்து கொள்கிறார்கள்
அரசியல் கட்சிகள் அதே மாதிரி பல்வேறு அமைப்புகள் திருவிழாவிற்கு மூட்டைக்கு இரண்டு ரூபாய் கொடுங்க என கேட்பது தேவையில்லாதது ஏ .ஐ .டி.யூ.சி தொழிற்சங்கத்தை பொறுத்தவாறு விவசாயிகளுக்காக கொண்டு வந்தது இந்த சங்கம் முழுவதும் விவசாயிகளுக்கு பயன்படவேண்டும் ஊழல் களையப்பட வேண்டும் இதுல ஆயுதமாக பயன்படுகின்ற கொள்முத பணியாளர்கள் சுமை தூக்கும் பணியாளர்களை அந்த ஊழலுக்கு ஈயுதமாக பயன்படுத்தப்படுகிறது இதனை கைவிட வேண்டும் என்பது தான் கோரிக்கை என தெரிவித்தார்