BREAKING NEWS

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர்
மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் முன்னிலை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜகவினர், தன்னிச்சை அமைப்பான அமலாக்கத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விசாரிப்பதை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் முழுக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், நிர்வாகிகள் லெட்சுமிநாராயணன், பழனியப்பன், மாமன்ற உறுப்பினர் ஹைஜாக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )