BREAKING NEWS

மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் வடக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் வடக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் எரிவாயு விலை குறைக்க கோரியும் பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களை நியாயவிலைக் கடையில் வழங்க கோரி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலையில்,

மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் குமாரவேல், கழுகுமலை முத்துசாமி, முத்து, ஜெரால்டு, கேப்டன் நகரச் செயலாளர் பாண்டிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )