மயிலாடுதுறையில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது.
இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் தரக்குறைவாக பேசியதாகவும், மாணவிகளிடம் அவதூராக பேசுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மணிபாரதி, ரஞ்சித், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உடனடியாக கல்லூரி முதல்வர் விஜயேந்திரனை பணிநீக்கம் செய்யக்கோரியும் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரியம்,
தற்போது வட்டார சேவை மையத்தில் இயங்கி வரும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும்,
மூன்று மாணவர்களை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய கோரியும் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.