BREAKING NEWS

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர் கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசு உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திருப்பப்பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கைகளில் பதாகை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இதில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் வா.செல்லையன், மயிலாடுதுறை நகர செயலாளர் எஸ்.செந்தமிழன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பா.சந்தோஷ் குமார், முன்னாள் நகர கழக செயலாளரும்,

 

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான நாஞ்சில் கார்த்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஆர்.எஸ்.சங்கர், மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் நடுக்கரை ஊராட்சி மன்ற தலைவருமான பிரேம்குமார் மற்றும் நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS