BREAKING NEWS

மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.

மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் மயிலாடுதுறை – சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து இயக்க வேண்டும் மற்றும் ஐந்து பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏழாம் தேதி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தினை அறிவித்திருந்தனர்.

இதனிடையே அதிகாரிகள் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வப்போது உறுதியளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் A19 என்கின்ற புதிய பேருந்துக்கு போக்குவரத்து துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று அப்பகுதி வள்ளலாகரம் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாபு முன்னிலையில் தலைவர் அன்பழகன் கொடிஅசைத்து இயக்கப்பட்ட பேருந்துக்கு அப்பகுதி மக்கள் கோலாகலமாக வரவேற்பு அளித்தனர்.

 

பேருந்திற்கு மாலை அணிவித்து வெடி வெடித்து பயணத்தினை துவக்கி வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

இந்த நகரப் பேருந்து மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி மார்க்கமாக செல்லும் சாலையில் சுங்காங் கேட், காளியம்மன் கோயில், சிவப்பிரியா நகர், நாகங்குடி, லட்சுமிபுரம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து பொதுமக்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராபர்ட் சுதா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் மற்றும் நகரவாசிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS