BREAKING NEWS

மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18.26 கோடி கடனுதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி:

மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18.26 கோடி கடனுதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி:

மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 138 உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.2.76 கோடி கடனுதவியும் 442 மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.15.50 கோடி கடனுதவிகளையும் வழங்கினார்.

 

அமைச்சர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றம் முதலில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். சமூக நலத்துறையில் இருந்த மகளிர் சுயஉதவி குழு பிரிவை ஊரக வளர்ச்சித்துறையோடு இணைத்தவர் கலைஞர். அவர் வழியிலேயே தமிழக முதல்வர் பெண்களின் வளர்ச்சியில் முனைப்போடு பல்வேறு திட்டங்கள் வாயிலாக பெண்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.300 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.303 கோடிகடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20000; கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.21,260 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி, கூடுதல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் மணிஸ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜகுமார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )