மயிலாடுதுறை அருகே உறிகட்டி சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா.

மயிலாடுதுறை அருகே மகான் சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தில் மகான் உறிகட்டிசுவாமிகள் உறிகட்டி சுவாமிகளின் ஜீவசமாதி அடைந்த இடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகான் சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டும் நேற்று 9-ந்தேதி 116-வது ஆண்டு குருபூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.இதனையொட்டி மகா ருத்ர யாகமும் அதனைத் தொடர்ந்து மகா அபிசேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஓதுவாமூர்த்திகள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வேஷ்டி துண்டு போர்வைகள் வழங்கப்பட்டன பின்னர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சேத்திரபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஊறிகட்டி ஸ்வாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் ஆர்.கே.கண்ணன் தலைமையில் முகிலன்.ஆர்.கே.வைத்தி, வேல்சாமி.ரெங்கபாஸ்யம் மற்றும் சேத்திரபாலபுரம் கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.