BREAKING NEWS

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.

மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம்,

தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

 

 

ஆழிப் பேரலை தாக்கியதன்மான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட 26 கிராமங்களிலும் மீனவர்கள் கடற்கரையில் கூடி சிறப்பு ஹோமங்கள் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.

 

 

தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேட்ச் அணிந்தவாறு ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில்18ம் ஆண்டு உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து, அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.

 

 

தரங்கம்பாடியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா எம் முருகன், பாஜக மாவட்ட தலைவர் அகோரம்,

 

 

அதிமுக ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்துகொண்டு ஆழிப்பேரலை தாக்குதலில் உயிர் நினைத்தவர்களுக்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS