மயிலாடுதுறை ஏழு குடும்பத்தினருக்கும் மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார்
மயிலாடுதுறை ஏழு குடும்பத்தினருக்கும் மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த ஏழு குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இரு தரப்பினரும் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே எதிர்தரப்பில் தமிழ்வாணன் என்பவர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் 7 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் அபராதமாக 40 லட்சம் பஞ்சாயத்துக்கு கட்ட வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நான்கு முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அபராத பணத்தை கட்டும்படி கோட்டாட்சியரும் வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான 7 குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதாவிடம் மனு அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் அமர்ந்து மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி தங்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
