மயிலாடுதுறை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்றிய நகராட்சி நிர்வாகம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலை மகாதான தெரு பெரிய கடை தெரு சின்ன கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன்பு முகப்புகளில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று முதற்கட்டமாக சின்னக்கடை வீதி மார்க்கெட் பகுதியில் துலா கட்டப்பகுதி ஆகிய கடைவீதிகளில் இரு புறங்களிலும் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமப்புகளை நகராட்சி ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் உதவியுடன் அகற்றினர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும் நகராட்சி கட்டமைப்பு அலுவலர் தெரிவித்தார்.