மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.

மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது.

நிகழும் மக்களகரமான காலை 5.45 மணி முதல் ஸம்வஸ்தரா அபிஷேகம் வைபவத்தின் அங்கமாக காமியாத்த ஜபங்கள், ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ ருன கணபதி, ஸ்ரீ குபேர லட்சுமி கணபதி, ஸ்ரீ விக்ன ராஜ கணபதி, ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ தருண கணபதி, ஸ்ரீ காரிய சித்தி கணபதி, நவக்கிரக கணபதி, ஸ்ரீ கற்பக விநாயகர் மூல மந்திர ஜபங்கள், ஹோமங்கள், நடை பெற்றன.
தொடர்ந்து பூர்ணாஹுதியும், கலசபுற்பாடும், விஷேச அபிஷேக சிறப்பு கலச அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்கும்பாபிஷேகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
