மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் அகரக்கீரங்குடி, நல்லத்துகுடி, பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 – வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் முருகமணி தலைமை வைத்தார். மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், தலைமை கழக பேச்சாளர் ஆவடி ஜான் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விலக்கி சிறப்புரையாற்றினர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
முன்னதாக நல்லத்துக்குடியில் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், அசோகன், வெங்கடேசன் ஒன்றிய துணை செயலாளர் மதனகோபால், இதயசந்திரன், பத்மா சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிராஜா, தமிழரசன், பிரியா பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் சிவகோபாலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் ஆகியோர் நன்றி கூறினர்.