BREAKING NEWS

மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை

மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூறைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறை மற்றும் காவல்துறையிடம் சிறுத்தை சிக்காத நிலையில் 3ம் தேதி இரவு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

நான்காம் தேதி காலை அந்த பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் காட்டுப்பகுதியில் சென்று புகுந்தது. அதனைத் தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.முதலில் மூன்று கூண்டுகள் வைத்து சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது 30க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து தேடி வந்த நிலையில் சித்தர்காடு பகுதியில் சிறுத்தை ஒரு ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.

சிறுத்தையின் நகர்வுகள் வெவ்வேறு இடங்களில் இருந்ததால் வனத்துறையினர் சித்தர்காடு மறையூர் கோவங்குடி அசிக்காடு ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஏழு கூண்டுகள் வைத்து வனத்துறையினர் காணித்த நிலையில் கூண்டில் இன்று காலை எதுவும் சிக்கவில்லை.மூன்றாம் தேதிக்கு பிறகு கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் உருவம் பதிவாகாத நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரம் சிறு சிறு காடுகளில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என வனத்துறை கருதி வருகின்றனர் ஆனால் இரண்டு நாட்களாக சிறுத்தை பற்றி உறுதியான தகவல் தெரியாத நிலையில் கடற்கரை மணலில் ஊசியை தேடுவது போல் வனத்துறையின் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது

சித்தர் காட்டிற்கு அருகில் காவிரி கரையோரம் நிறைய புதர் செடிகளும் நாணல் காடுகளும் உள்ளதால் அதன் வழியே சிறுத்தை சென்று இருந்தால் பொதுமக்கள் யாரும் பார்க்காத வரை சிறுத்தை எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது முடியாத காரியம் ஆகும். இரண்டாம் தேதி இரவு சிறுத்தை தஞ்சம் அடைந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான காட்டில் சிறுத்தை பிடித்து இருக்கலாம். உயர் அதிகாரிகள் தாமதமாக வந்து பல்வேறு நடவடிக்கை எடுத்ததால் சிறுத்தை எங்கே இருப்பது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS