மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்- இரா.யோகுதாஸ்
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டின் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து சட்டசபையில் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் அமைச்சர்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டின் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என ஏராளமான வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS தமிழ்நாடுதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை நீதிமன்ற வழக்கறிஞர்கள்மயிலாடுதுறை மாவட்டம்மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம்