மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவியர் விடுதி, தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும்,
மற்றும் மணக்குடியில் 24 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணிகளையும், மன்னம் பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் 114 கோடி செலவில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை நகரம் என்னும் பணி கடந்த ஒரு மாத காலமாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அவர்களையும் சனிக்கிழமை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், அரசினர் மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதி போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்காக்கள் நமக்கு நாமே திட்டத்தில் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் நிழல் தரும் மரங்கள் என்று சொல்லக்கூடிய குறுங்காடுகள் மிக விரைவில் அமைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் வளாகம் முன்பு குறுங்காடுகள் அமைக்கப்படும்.
அதாவது பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்து செல்வதால் அவர்கள் சற்று உக்காரும் நிலை ஏற்படுவதால் வளாக முன்பு நிழல் தரும் மரங்களும் உட்காரும் (இருக்கை) பலகையும் அமைக்கப்படும். அரசு அலுவலங்களில் மாதம் ஒரு முறை தூய்மை பணி மேற்கொள்ளப்படும். பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள மண்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன்.
மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் புதிதாக 99 கோடி செலவில் வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். மாவட்ட முழுவதும் சாலைகளில் சில இடங்களில் குண்டும் குழியுமான இடங்களில் உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைக்கப்படும். சாலையில் உள்ள வேகத்தடைகள் வெள்ளை நிற வர்ணம் பூசப்படும். பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை ஆதிதிராவிட நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய விடுதி வளாகம் முன்பு மரம் செடி குப்பைகள் இருந்ததை நேரில் பார்வையிட்டேன். அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சியின் மூலம் இன்று உடனடியாக குப்பைகளும் பூண்டும் புதருமான செடிகளும் அகற்றப்பட்டன.
ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் உடனடியாக இன்வெட்டர் வசதி செய்து கொடுக்கப்படும். சாலைகளில் உள்ள மண்களை உடனடியாக அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், பொதுப்பணித்துறை, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ் ஒளி,
உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் பேகம், நகர் மன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், விஜய், தெய்வநாயகம், உதயகுமார், மற்றும் வருவாய்த்துறை நகராட்சி துறை பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.