BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி (சீ.பி), ஊன்றுகோல், முழங்கை ஊன்றுகோல், நடைஉபகரணம், கருப்புகண்ணாடி, எழுத்துஉருபெருக்கி,

 

பார்வையற்றோருக்கான மடக்குகுச்சி, நவீனமடக்குகுச்சி, காதுக்குபின்அணியும் காதொலிகருவி, கை கடிகாரம், பார்யற்றோருக்கான எலக்டிரிகல் ரீடர், செல் போன்,கார்னர் சீட், நவீன செயற்கைகால்கள், தையல் இயந்திரம்,பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகிய உதவி உபகரணங்கள் பெற தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல்,ஆதார் அட்டை நகல், குடும்பஅட்டை நகல்,

வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ 1. இரத்தவகை, கைப்பேசிஎண், கையொப்பம் /கைரேகை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனுக்களுடன் மேற்கண்ட நகல்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகின்ற 26.06.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )