மயிலாடுதுறை மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், முத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட 2022 துவக்க விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தபின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, 2022 -ஆம் ஆண்டுக்கான குறுவை தொகுப்புத் திட்டம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாகவும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட டெல்டா வட்டாரங்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் இரசாயன உரங்கள் 1.90 லட்சம் ஏக்கருக்கு ரூ.46.92 கோடியும், 50 சத மானிய விலையில் நெல் விதைகள் வழங்க ரூ.4.20 கோடியும், குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடி செய்ய ரூ.3.40 கோடியும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் ரூ.54.52 கோடியும், வேளாண் இயந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ.6.61 கோடி என மொத்தம் ரூ.61.13 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப் பயிர சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்குவதற்காக ரூ.14,014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை. குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய ஐந்து வட்டாரங்களுக்கு இந்த ஆண்டு 52,000 ஏக்கருக்கு குறுவை சிறப்பு தொகுப்பாக யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2466.50 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி மற்றும் 25 கிலோ பொட்டர்” அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், விதைக்கிராம திட்டத்தின் மூலமும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமும் 50 சதவிகிதம் மானியத்தில் 660 டன் நெல் விதைகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.
இதே போல, குறுவைப் பருவத்தில் பல்வகைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு 50 ஏக்கருக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்களுக்கு மற்றும் விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதனிகிதம் மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
குறுவையில் பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 500 ஏக்கரில் உளுந்து பயிரிடும், பொது விவசாயிகளுக்கு விதைகள், இலை வழி டரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ.1250-ம், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சத மானியத்தில் ரூ.1570-ம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்கென பொது விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ரூ.5600 வரையிலும் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை களை எடுக்கும் கருவி 8 எண்ணிக்கையிலும், விசை உழுவை எந்திரம் 6 எண்ணிக்கையிலும், ஒருங்கிணைந்த நெல் அறுவடை எந்திரம் 3 எண்ணிக்கையிலும், தானியங்கி நடவு எந்திரம் 9 எண்ணிக்கையிலும், டிராக்டர் 2 எண்ணிக்கையிலும், வைக்கோல் கட்டும் கருவி 2 எண்ணிக்கையிலும் ஆகியவையும் மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முன்னதாக 12 விவசாயிகளுக்கு 1 மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி மற்றும் 25 கிலோ மூட்டை பொட்டாஷ் உரங்கள் அடங்கிய உரத் தொகுப்பு முழு மானியத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சீரகாழி சட்டமன்ற உறுப்பினர் எம், பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மயிலாடுதுரை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், இணை இயக்குநர் வேளாண்மை ஜெ சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி. ஜெயபாலன், துணை இயக்குநர் (வேளாண்மை) மதியரசன், குத்தாலம்’ உதவி இயக்குநர் (வேளாண்மை) வெற்றிவேலன். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (பொ) அன்பரசு, முத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஷ்வரி முருகன், முத்தூர் ஊராட்சி திமுக செயலாளர் எம்.எஸ்.கே.மாதவன் மற்றும் வேளாண்மை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
