BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல். விதவைசான்று, ஆதரவற்ற விதவை சான்றுகோரி 55 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 15 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 19 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 18, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை வங்கிகடன் கோரி 35 மனுக்கள், மொத்தம் 142 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில். மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், உதவி ஆணையர் கலால் கோ.அர.நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ.கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )