BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.

செய்தியாளர் க.கார்முகிலன்.

 

மயிலாடுதுறை தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 09.11.2022 புதன்கிழமை ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

 

 தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் கூட்டமைப்பின் துணையோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைந்து தரங்கம்பாடி தூய தெரசா கல்லூரி தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

 

 

இதில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி கருணா ஜோஸ்பாத் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வீரா. காமராசன் தலைமை தாங்கினார். 

 

நிகழ்ச்சியில் பொறையார் த.பே.மா.லு. கல்லூரியின் வணிகவியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர். இளங்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

 

திரு. அ.ஜார்ஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மைவியல் துறை தலைவர் மற்றும் தொ.மு.கூ ஒருங்கிணைப்பாளர் திரு. அ.ஜார்ஜ் அவர்கள் செய்திருந்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதியை சார்ந்த தொழில் முனைவோர் பலரும், கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )