மயிலாடுதுறை மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான ஆணை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான ஆணை வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் வசித்து வரும் மக்களுக்கு அனைத்து அரசு நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று காலை தரங்கம்பாடி வட்டம், மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் காவிரிக்கரை ஓரத்தில் வசித்துவரும் குடும்ப அட்டை இல்லாத உரிக்கார நாயக்கர் மற்றும் குறவர் சமூக மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பொருட்டு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலரால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அவர்களுக்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்யப்பட்டு, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலரால் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான ஒப்புதல் ஆணையினை தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரும் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலருமான நாராயணன் அவர்களால் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, தனி வட்டாட்சியர் இந்துமதி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஓயாசிஸ் வட்ட பொறியாளர் ஐயப்பன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
