BREAKING NEWS

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது .

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானாதிராஜபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. கலைஞரின் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

 

டாக்டர் கோபி வட்டார மருத்துவ அலுவலர் வரவேற்புரையாற்றினார்.கா.அமிர்தாகுமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முன்னிலைவகித்தார்.மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முகாமினை குத்துவிளக்கு ஏத்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர்.டாக்டர் அக்ஷயகுமார் மருத்துவ அலுவலர் தேரிழந்தூர்.தலைமை ஆசிரியர் முருகன்.வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா.மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபியுதின் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.

 

முகாமில் இசிஜி ஸ்கேன் ரத்தப் பரிசோதனை சிறுநீர் பிரச்சனை கண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டன மேலும் ஊட்டச்சத்து கண்காட்சி முகாம் நடைபெற்றது இதில் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 88 நபர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர் வானாதிராஜபுரம் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜிஆர்ஆர் சங்கரி தமிழரசன் நன்றி கூறி நிறைவு செய்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )