மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மலைக்குறவர் குழந்தைகள் 8 ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் உத்தம குமரன் தலைமையில் நடைபெற்றது தஞ்சாவூர் திருவாரூர் நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மலைக்குறவர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு சாதி சான்றிதழ் வழங்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால் எட்டாம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் படிக்க முடியாமல் தடை ஏற்படுகிறது எனவே உடனடியாக மலைக்குரவர்கள் குழந்தைகளுக்கு எஸ்.டி சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் வீட்டுமனை தொகுப்பு வீடு உள்ளிட்டவைகளை உடனே வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர் நாக்காலே என்ற நரிக்காரர்களை நரிக்குறவர் எனகூறுவதை தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
