மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா!

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே இச்சிலடி கிராமத்தில் மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
பெட்சி எலிசபெத் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் உதவும் உள்ளங்கள் மழலையர் பள்ளியின் 25 வந்து ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது விழாவில் ஹில்டா எலிசபெத் தலைமை வைத்தார், சபைக்கு ஜான்சன் மான்சிங், தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபையின் முன்னாள் கல்வி கழக தலைவர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி கலந்துகொண்டு புதிய மழலையர் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.பின்னர் பள்ளியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதில் ஆசிரியர்கள்- மாணவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
TAGS தலைப்பு செய்திகள்
