BREAKING NEWS

மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தஞ்சை மேயர் பேட்டி. 

மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தஞ்சை மேயர் பேட்டி. 

 

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமையான வீடுகளில் குடியிருப்போர் பாதுகாப்பு கருதி வெளியேற வேண்டும், பழமையான வீடுகளை வாடகைக்கும் விடக்கூடாது வானிலை மையத்தின் கன மழை எச்சரிக்கையை அடுத்து தஞ்சை மேயர் வேண்டுகோள்.. மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் மேயர் பேட்டி: 

 

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.

 

 

 மழைக் கால விபத்துகள், பாதிப்புகள் ஏற்பட்டால் விரைவாக தடுத்திட 850 பணியாளர்களுடன் தஞ்சை மாநகராட்சி தயாராக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் ராமநாதன் மேலும் கூறுகையில்..

 

கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதன்படி தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் 850 பணியாளர்களை தயாராக வைத்துள்ளது பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், நீர் இரைக்கும் மின் மோட்டார்கள் உள்ளிட்டவை தயாராக இருக்கிறது என்றவர், 

 

மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் 100 ஆண்டுகள் பழமையான வீடுகளில் வசிக்க வேண்டாம், வாடகைக்கும் விடவேண்டாம் என்று அறிவுறுத்தியவர், 

 

 

மாடுகளை சாலையில் விட்டால் அதன் உரிமையாளர்களுக்க 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார், 

 

டோல் ப்ரீ எண் மற்றும் 24 x 7 மழைக்கால புகார் எண் 7598016621 வெளியிடப்பட்டது, இதனை பயன் படுத்தி, பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்வார்கள் என்றார்… அதேபோல் சிறப்பு முகாம்களும் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )