மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாட்டினுடைய உரிமையாளர்கள் பலமுறை கண்டிக்கப்பட்டும், அதனை கண்டு கொள்ளாமல் மாடுகளை ரோட்டோரங்களில் அலைய விடுவதால் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகின்றது.
கடந்த சில மாதங்களாக மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதும், போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகின்றது. இதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலீல், அம்பாசமுத்திரம் நகர தலைவர் நாசர், நகர பொருளாளர் செய்யதுஅலி மற்றும் பள்ளக்கால் நகர தலைவர் ஷேக் மைதீன், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் ஷேக் அலி, நகர துணை தலைவர் பீர்ஷா, நகர செயலாளர் ஷானவாஸ், நகர பொருளாளர் சம்சுதீன் மற்றும் கல்லிடை நகர தலைவர் கலீல் ரஹ்மான், நகர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், செயல்வீரர்கள் என கலந்து கொண்டார்கள்.