BREAKING NEWS

மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது.

மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது.

திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் 26. இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார்.

இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி உள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.

 

மாணவி சென்று கேட்டபோது அவதூறாக பேசியதோடு எரித்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். மாணவியின் புகாரின் பேரில் தாலுகா போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )