மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களிலிருந்து 18பேர் விதம் 288 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.


போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவங்க வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாணவர்களுடன் அவரும் சதுரங்கப் போட்டி விளையாடினார். இந்தப் போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியா போட்டிகள் பங்கு பெற உள்ளனர்.
