மாதாகோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதில் காவல் துறையினர் கால்நடை மருத்துவம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும், 300 மாடுபுடி வீரர்களும் பங்கேற்கின்றனர். 12 சுற்றுகலாக போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகு வரிசையாக டோக்கன் முறைப்படி அனுமதிக்கப்பட்டன.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, திருமலை சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்த நிலையில் தற்போது மாதா கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வருகிறது.