மாநகராட்சி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது மாநிலத் தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் அகவிலைப்படி வழங்க வேண்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சீனியாரிட்டி முறையை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சுந்தரராஜ் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலக பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
