மானாமதுரையில் அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர் வி ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமியை கைது செய்ததை கண்டித்தும்,
திமுக அரசின் அராஜக ஆட்சியை மற்றும் செயல்பாடுகளை கண்டித்து அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நகர செயலாளர் விஜிபேஸ் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் முன்னால் எம்எல்ஏ நகராஜன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ஏசி மாரிமுத்து, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நாகேந்திரன், 15வது வார்டு கவுன்சிலர் தெய்வேந்திரன் மற்றும் நகர, ஒன்றிய அஇஅதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES Uncategorized