மானாமதுரையில் இருசக்கர வாகன விபத்து கணவன் மனைவி பலி…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த மிளகனுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி வயது (60)கஸ்தூரி வயது (54) கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் மேலப்பசலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தீயனூரில் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்லும் பொழுது எதிர்பாராமல் விதமாக எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் கடந்து சில வருடங்களாக விபத்துக்கள் நடந்து வருகிறது. அதே போல் நேற்று சாலையை கடக்கும் பொழுது இருவர் பலியானது சேகத்தை எற்படுத்தியது.
அடிக்கடி இந்த சாலையில் உயிரிழந்தவர்களும் கை கால் முறிந்தவர்களும் முதல் உதவி செய்து வீடு திரும்பியவர்களும் அதிகமாக இருந்து வரும் சாலை பகுதி அமைந்துள்ளது. இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விளக்கு சாலையில் பொருத்தக்கூடிய ரிப்ளக்ஸன் லைட் பொருத்தினால் வாகன ஓட்டிகளிடம் இருந்து விபத்துக்களை தவிர்க்கலாம்.
மேலும் இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து மானாமதுரை டி.1 காவல் நிலையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.