BREAKING NEWS

மானாமதுரையில் இல்லம் தேடி கல்வி நான்காம் கட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.

மானாமதுரையில் இல்லம் தேடி கல்வி நான்காம் கட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மானாமதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல்திறன் மேன்மை அடையச் செய்யும் எண்ணத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தி வருகின்றது.

அந்தந்த பகுதிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு வேலை தேடுபவர்களில் தன்னார்வலர்களை தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்க ப்படுகிறது

 

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தில் தொடக்க நிலையில் 172 மற்றும் உயர்நிலையில் 137 என மொத்தம் 309 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

நடப்பு கல்வி ஆண்டில் மூன்று கட்டமாக பயிற்சிகள் முடிவடைந்து தற்போது நான்காம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

 

இதற்கான கற்றல் உபகரணங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது இதில் அட்டைகள், போஸ்டர் பயிற்சி புத்தகம் என 21 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

 

  தன்னார்வலர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆசிரியர் பயிற்றுனர் கலா மற்றும் ராமையா ஆகியோர் உபகரணங்களை வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )