BREAKING NEWS

மானாமதுரையில் முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கழக ஒபிஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..

மானாமதுரையில் முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கழக ஒபிஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..

செய்தியாளர் வி.ராஜா.

 

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் 115 பிறந்த நாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பபொன்னை நோக்கி சாலை மார்க்கமாக முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தத போது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதிய பேருந்து நிலையம் அருகே வந்த போது அஇஅதிமுக கழக ஒபிஸ் அணி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்களும் உற்சாக வரவேற்றனர். 

 

 

இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் நமச்சிவாயம், மற்றும் அதிமுக கழக தொன்டர்களும் கலந்து கொண்டு வரவேற்றனர். 

 

 

இதனையடுத்து காரில் பசும்பொன் நோக்கி முத்துராமலிங்கம் தேவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்க மரியாதை செலுத்த சாலை மார்க்கமாக சென்றார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )