மானாமதுரை உடைகுளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், காப்பு கட்டுதல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
உடைகுளம் முத்துமாரியம்மன்கோயில் 41 வது ஆண்டு பங்குனித்திருவிழா நேற்று காலை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது.
அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காப்புக்கட்டுதல் நடந்தது. பூக்குழி இறங்குபவர்கள், அக்னிசட்டி, பால்குடம் எடுப்பவர்கள், அலகு குத்துபவர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த கோயில் பூசாரியிடம் காப்புக்கட்டிக்கொண்டு விரதத்தை துவங்கினர்.
வரும் 24 ம் தேதி பொங்கல்விழாவில் மானாமதுரை வைகை ஆற்றில் கரகம் எடுத்து ஊர்வலமாக பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்துதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செய்தியாளர் வி. ராஜா
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்காப்புக்கட்டும் விழாசிவகங்கைசிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பங்குனி பொங்கல் விழாமானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில்