BREAKING NEWS

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

 

மாகத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடைபெற்றது.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய மாநில அரசு கண்டித்து மாற்றுத்திறனாளிகளை அழலக்கழிக்காமல் அனைத்து ஊராட்சிகளிலும் அரசினை 52ன் படி தொடர்ச்சியாக 100நாள் வேலை வழங்கிடவும், 4மணி நேர வேலைக்கு முழு சம்பளம் ரூபாய் 281/-ஐ வழங்கவும்,

 

ஒவ்வொரு ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பு செய்து அனைவருக்கும் வேலை வழங்கிடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு தனி நபருக்கும் என்.எம்.ஆர் வழங்கவும் மற்றும் ஏ.எஸ் தீர்மான பணியிடங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகே வழங்கவும், அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளையும் 100 நாள் வேலை திட்ட இணையதளத்தில் (ஆன்லைன்) உடனே இனைக்கவும்,

 

 

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல வண்ண அட்டை வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் அதிகமாக வேலை செய்யும் இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை பொறுப்பாளாராக நியமனம் செய்யவும், NMMS-APP செயலியை அளித்து வேலை வழங்கிடவும்,

 

மாற்றுத்திறனாளிகளை பணியிடங்களில் அவமரியாதை செய்யும் அரசு அலுவலர்கள் மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவும் மாற்றுத்திறனாளிகள் எடுத்துரைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

இந்த ஆர்பாட்டத்தில் மானாமதுரை மாவட்ட துனை செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில், மாவட்ட துணை தலைவர் மலர்விழி, சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் முத்துராமலிங்க பூபதி அவர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS