BREAKING NEWS

மானாமதுரை கராத்தே மாணவி பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.

மானாமதுரை கராத்தே மாணவி  பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கராத்தே போட்டியில் சிறந்த பயிற்சியாளராக களமிறங்கிய கராத்தே மாஸ்டர் சிவ.நாகராஜீன் இவர் தற்போது
சத்தீஸ்கர் மாநிலம் பிளாஷ்பூரில் அகில இந்திய கராத்தே விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மானாமதுரை சிவ.நாகராஜீன் கராத்தே பயிற்சி பள்ளியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர் இதில் கலந்து கொண்ட மாணவர்கள் எம் . திக்சன் வயது 9 சண்டை பிரிவில் 4 ரவுண்டில் வெற்றி பெற்றான் ஆர். கபினேஸ் வயது 11 சண்டை பிரிவில் 5 ரவுண்டில் வெற்றி பெற்றார் . பி.ரதீபா வயது 11 சண்டை பிரிவில் 6 ரவுண்டில் வெற்றி பெற்றார்.

 

 

ஏ.பிரியதர்ஷினி வயது 12 கட்டா பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இதனால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு பெருமை சேர்த்த கராத்தே மாஸ்டர்களுக்கு கலந்துகொண்ட மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து பொன்னாடை போற்றியும் மேளதாளத்துடன் வரவேற்றனர் மானாமதுரை பொதுமக்களும் கராத்தா பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு வரவேற்றனர்.

இவர் சசுமார் 20 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மானாமதுரையில் பயிற்சி அளித்து வருகிறார் தற்போது சிறந்த பயிற்சியாளர் காண கவுரவ டாக்டர் பட்டத்தை உலகலாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் சிவ. நாகராஜீன் கராத்தே மாஸ்டர் கவுரவ டாக்டர் பட்டம் விருது வழங்கப்பட்டது.

 

 

இவர் பயிற்சி அளித்த மாணவர்கள் ஏராளமானோர் தமிழக காவல்துறை பணியிலும் அரசு பள்ளி உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பலமுறை வெற்றியாளர் கோப்பையை தட்டி சென்றிருக்கிறார் மாநில அளவிலான போட்டிகளில் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என எண்ணற்ற வெள்ளி வெண்கலப் பதக்கங்கள் தற்போது தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளனர்.

தற்போது இவரிடம் 100 மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் இந்த வகுப்பில் எட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் வகுப்புகள் நடந்து வருகின்றன இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளித்து வருகிறார் இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவரையும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்லும் அளவிற்கு தயார் நிலைப்படுத்தும் திறமை கொண்ட ஓர் பயிற்சியாளர் சிவ.நாகராஜீன் என்று அனைவரும் பெருமைப்படுத்தும் விதமாக உள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )