மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி இரவிக்குமார் அவர்கள் மகளிர் கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கழக மகளிர் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக தனியார் மஹாலில் நடைபெற்றது.
கழகம் துணை பொதுச்செயலாளர் கனிமொழிகருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரை கழக மகளிர் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கழகத் துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தை திருநாளை முன்னிட்டு மகளிர் நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்களது சொந்த நிதியிலிருந்து பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் மகளிர்களுக்கு கழக நிர்வாகிகளுக்கு பித்தளை பானை, கரண்டி பச்சரிசி வெல்லம், தேங்காய், சேலை, மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான காலண்டரும் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் அவர்களும் நகரச் செயலாளர் பொன்னுச்சாமி ஒன்றிய குழு தலைவர்.லதா அண்ணாதுரை அவர்களும் ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு துணைத் தலைவர் முத்துச்சாமி அவர்களும் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன்,
மாவட்ட மகளிர் அமைப்பாளர் பவானி கணேசன் திமுக கழக பொருளாலர் மயில்வாகனன் திமுக வட்ட பிரதிநிதி சிவராமான், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் மற்றும் அரசுதுறை சார்ந்த அதிகாரிகளும் திமுக கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.