மானாமதுரை தீயனூர் கிராமத்தில் முளைப்பாரி உற்சவ விழா.!
செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள தீயனூர் முத்துமாரியம்மன் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் முளைப்பாரி ஓடுகளை ஒரு வாரத்திற்கு முன்பாகவே கிராம கோவில் இடத்தில் முளைப்பாரி ஓடுகளை வளர்த்து வருகின்றனர் பிறகு அந்த ஏழு நாட்களும் ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியோர்களும் ஒயிலாட்டம் காவடி ஆட்டம் போன்ற ஆட்டங்களை ஆடி கோயில் முன்பு ஏழு நாட்களும் ஆரவாரத்துடன் நடைபெறும் வீட்டில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து கோவில் பூசாரிகள் நீராடி வைகாற்றின் நீரை கும்பக்கரகத்தில் எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள் விழா விமர்சியாக நடைபெறும்.
முத்துமாரி அம்மனின் திருக்கோவிலுக்கு கொண்டு நேத்தி கடனை செலுத்தி குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை தூக்குவதும் கரும்பாலை தொட்டி கட்டி கோயிலை சுற்றி வருவதும் குழந்தை வரம் கொடுக்க மண்ணில் உருவ குழந்தை பொம்மையை இடுப்பில் சுமந்து சுற்றி வருகின்றனர் நிறைவேற்றிய பிறகு இக்கோயில் முன்பாக 108 தேங்காய் உடைத்து தீபாரனை காட்டி வழிபடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை காலையில் எந்த ஒரு வேறுபாடு இன்றியும் அனைத்து கிராமங்களில் வந்திருந்த பெண்கள் அனைவரும் முளைப்பாரி ஓடுகளை ஆரவாரத்துடன் தூக்கி சென்று முளைப்பாரி ஓடுகள் தூக்க வேண்டும் முதலில் ஞாபகம் வரக் கூடியது நமது தீயனூர் கிராமம் மட்டுமே நடக்கக்கூடிய விழாவில் அனைத்து பெண்களும் முளைப்பாரி ஓடுகளை மிகுந்த ஆர்வத்துடனும் தூக்கி முத்துமாரியம்மன் கோவிலை வலம் வந்து பிறகு அனைத்து ஓடுகளையும் விவசாயத்துக்கு சொந்தமான பெரிய கம்மாயி தண்ணீரில் உள்ளே முளைப்பாரி ஓடுகளை அனைத்தையும் உள்ளே முளைப்பாறையை அமுக்கி விடுவார்கள்.
இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி சுட்டெரிக்கும் வெயில் தாகத்தை தணிக்க கூடிய நீர் மோரும் சர்ப்பதும் போன்ற குளிர்பானங்களை வழங்கினர் இதைத்தொடர்ந்து நமது காலங்காலமாக இது போன்ற விசேஷங்களை செய்து வரும் பொழுது விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தெய்வம் வேண்டுதலின்படி மழையாக பொழிந்து கம்மாய் பெருகி விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் ஓர் உண்மையான தருணம் என மகிழ்ந்து கொண்டாடினர் கிராம பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.