மானாமதுரை வழிவிடு முருகன் ஆலாயத்தில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நெடுஞ்சாலை எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற வழவிடு முருகன் ஆலாயம் ஒன்றாகும் இக்கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது.
தமிழ் கடவுள் முருகனுக்கு கார்த்திககை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைபூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று தைபூசத்தை முன்னிட்டு மானாமதுரை வழிவிடு முருகன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை க்கு சிறப்பாக அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க தீபாஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த தைபூசம் நாளில் வழிவிடு முருகன் ஆலாயத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் அரோகார முழக்கமிட்டு முருகனை தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தைபூசம் விழாமானாமதுரைமானாமதுரை வழிவிடு முருகன் ஆலயம்