BREAKING NEWS

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்

செய்தியாளர் வி ராஜா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி முதல் நாள் அன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி படிகளுக்கும் விமர்சையாக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வண்ண அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

 

 

இவ்விழாவில் பெண்கள் அனைவரும் குத்து விளக்கு ஏற்றியும் பூ பழம் தேங்காய் போன்றவற்றை வாங்கி தீபாரணை செய்தும் ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் பூக்களால் அலங்கரித்து வண்ண உடையில் கோவில் வெளியே வந்து வீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

 

அதைத் தொடர்ந்து கோவிலை சுற்றி தேர் பவனி வந்தார். இதனை பக்தர் கோடிகள் பூமாலை தூவியும் சோமநாதனின் தேரினை வீதி உலாவாக இழுத்து சென்றனர். இவ்விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அரிசி நவதானியங்கள் தூவி சென்றனர் பல பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.

 

இதனால் கோயிலில் அதிக பக்தர்கள் திரளாக வந்து ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதரின் அருள் பெற்று சென்றனர். 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )