மானிய பணம் கொடுக்கும் வரை (பாய் தலையணையுடன்) காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு.

தென்காசி மாவட்ட திருவேங்கடம் தாலுகா விவசாயிகளுக்கு சென்ற ஆண்டின்
2021உளுந்து(விதை உற்பத்தியாளர்கள் ) மானியம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்காமல் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றது.
தென்காசி மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் இந்த ஆண்டு விதைப்புப் பருவம் தொடங்கிவிட்டது.
விவசாயிகள் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வரும் இந்த நிலையில் விவசாயிகளின் உளுந்து மானியம் பணத்தை இவர்கள் வைத்துக்கொண்டு (வேளாண்மைத் துறையினர் ),. விவசாயிகளை பல மாதங்களாக அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் தென்காசி மாவட்ட வேளாண்மைத்துறை,
இதில் திருவேங்கடம் தாலுகாவிலுள்ள குறிஞ்சாக்குளம் நடுவப்பட்டி வரகனூர் மற்றும் சிலகிராம விவசாயிகளுக்கு உளுந்து மானிய பணத்தை மாதங்கள் கடந்து வருடமும் முடியப்போகிறது. விவசாயிகளும் பல முறை அலைந்து திரிந்து வேளாண்மைத் துறைக்கு அலுத்துப்போய் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள்.
தென்காசி மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இப்பகுதி விவசாயிகளுக்கு உளுந்து மானிய பணம் செட்டில்மெண்ட் செய்யப்படவேண்டும் இல்லையெனில் தென்காசி மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் உளுந்து.
மானிய பணம் கொடுக்கும் வரை (பாய் தலையணையுடன்) காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு தமிழ் விவசாயிகள் சங்கம் தென்காசி மாவட்டம்.