BREAKING NEWS

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு மகனாக உதயநிதி ஸ்டாலின்?

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு மகனாக உதயநிதி ஸ்டாலின்?

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் முக்கிய தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் மாமன்னனாக உதயநிதி நடிக்கவில்லையாம். அது வடிவேலுவின் கதாபாத்திரம் என்றும், அவருக்கு மகனாகத்தான உதயநிதி நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாளும், அவரின் வாரிசாக பகத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வித்தியாசமான அரசியல் கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )