மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற்ற இம்முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விழாவில் பேருரையாற்றி மாணவ, மனைவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கோடைகால பயிற்சியில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுடன் சேர்த்து புதிய விளையாட்டுகளான கடற்கரை கபடி, கடற்கரை கைப்பந்து, கடற்கரை கால்பந்து மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.


இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் மாரிகண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
