மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா : பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்டத்தில் சுமார் 10 குரு வட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் இப்போட்டியில் பங்குபெற்றனர்.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது., இதன் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி கலந்துகொண்டு மாணவர்களிடையே புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, தலைமை தாங்கினார். ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர். புனிதவதி, அவர்கள் முன்னிலை வகித்தார்.
திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, விடுதி காப்பாளர்: எழுத்தாளர், இமயம் அண்ணாமலை, ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இத்துவக்க விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், PTA தலைவர் செல்வராசு, மாநில ஆசிரியர்கள் சங்கத் தலைவர் கணேசமூர்த்தி, ஆசிரியர் செயலர் பெருஞ்சித்திரன், பள்ளியின் ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் செல்வகுமார், காந்தி,..
திட்டக்குடி, விருதாச்சலம் குறுவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பையன், அருள், செந்தில்குமார், பிரகாசம், பன்னீர்செல்வம், கருணாநிதி, பாலமுருகன், அலெக்சாண்டர் மற்றும் பல உடற்கல்வி ஆசிரியர்களும், திமுக வடக்கு ஒன்றிய, மாவட்ட, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.