BREAKING NEWS

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.

சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்வது என்பது வாடிக்கையாக நடந்து வருகிறது அதனை பத்திரப்பதிவு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் மேலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகிறேன் எடுத்துக்காட்டாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் அருகே இஸ்லாமியர் ஒருவருக்கும் இந்து முன்னணியை சேர்ந்தவருக்கும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இந்து முன்னணியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த இஸ்லாமிய சகோதரர் மீது நடவடிக்கை இல்லை இது காவல்துறையை கண்டிக்க தக்க செயலாகும் அதே போல் தென்காசி மாவட்டத்தில் திமுகவின் கட்சிக் கூட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் பணிக்கும் விஏஓ உதவியாளர் பணிக்கும் மாவட்ட செயலாளர் கொடுத்த பெயர்களுக்கு தான் நியமனம் செய்யப்பட வேண்டும் என பேசப்பட்டுள்ளது.

 

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதோடு மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிக்கிறது பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு பணியாளர் ஒருவரை பாம்பு தீண்டி உள்ளது அதேபோல் பணியாளர் ஒருவரை வீட்டிலும் பாம்பு தீண்டி உள்ளது.

 

இது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுடைய சொத்துக்களை தவறாக பதிவு செய்யப்படுவதற்கான தண்டனை என்றே இப் பகுதி மக்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS