BREAKING NEWS

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு..

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி  குற்றச்சாட்டு..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பெருங்களத்தூர், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட 44 நியாயவிலை கடைகள் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் இயங்குகிறது.

 

இதில் ஒரு கடையின் கீழ் 1000முதல் 2000 குடும்ப அட்டைதாரார்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த 44 கடைகளிலும் பணியாற்றக்குடிய ஊழியர்கள் கடந்த 2014,2015 ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட புதியவர்கள் என்பதால் மாவட்ட மேற்கு தாம்பரம் சரக மேலாளர் ஜெயபால் என்பவர்.

 

அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 44 நியாயவிலை கடைகளிலும் மாதா மாதம் ஒருகடைக்கு 1000ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டாயப்படுத்தி மாமூல் வாங்கி வருவதாகவும், பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி முகம் சுளிக்க வைப்பதாகவும் பகிரங்கமாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

 

மேலும் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக்கடை மூலமாக பட்டாசு வழங்கப்பட்டது. மொத்தம் 16லட்சரூபாய் மதிப்பிலான பட்டாசில் விற்பனையான பட்டாசிற்கான 10லட்சரூபாயை செட்டில் பண்ணிவிட்டு மீதம் 6-லட்சரூபாய்க்கான பட்டாசுகளையும் திரும்ப ஒப்படைத்தாகி விட்டது.

 

அதில் ஒன்றரை லட்சரூபாயை கையாடல் செய்துவிட்டு அந்த தொகையை ஈடுகட்டுவதற்காக 44 நியாயவிலை கடை ஊழியர்களும் தலா 2ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதாகவும் தர மறுத்தால் குடோன் போன்ற இடங்களுக்கு பணி மாறுதல் செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் ஒட்டுமொத்த ஊழியர்களும் சரக மேலாளர் ஜெயபால் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

 

முக்கியமாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக புகார் அளித்தால் செய்யக்கூடிய வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என அச்சப்படுதின்றனர். ஆகவே தற்போதுள்ள சரக மேலாளர் ஜெயபால் மீது துறைசார்ந்த மாவட்ட கூட்டுறவுத்துறை பதிவாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை போன்ற ஊழியர்களை அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )