BREAKING NEWS

மாஸ்க் அணியாததால் கல்லூரி மாணவனின் தலை முடியை பிடித்து உலுக்கிய சப் இன்ஸ்பெக்டர்.. நடவடிக்கை எடுப்பாரா.? காவல் காண்கானிப்பாளர்.

மாஸ்க் அணியாததால் கல்லூரி மாணவனின் தலை முடியை பிடித்து உலுக்கிய சப் இன்ஸ்பெக்டர்.. நடவடிக்கை எடுப்பாரா.? காவல் காண்கானிப்பாளர்.

பேர்ணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் வல்லவன் இவர் கல்லூரி மாணவர் ஆவார் வல்லவன் பேரணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த எழுத்தாளரும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க துணை தலைவரும் இந்திய குடியரசு கட்சியின் பேரணாம்பட்டு நகர தலைவருமான டாக்டர் எஸ்.கதிரேசனின் மகன் ஆவார்.  வல்லவன் 11 .7 .2022 மதியம் 2 மணி அளவில் ஒரு வேலையாக பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே சென்றபோது பேரணாம்பட்டு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் வல்லவனை வழிமறித்து யார் நீ ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டு கல்லூரி மாணவன் ஆன வல்லவன் தலைமயிரை பிடித்து உலுக்கிய தனது அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

 

கடந்த மார்ச் மாதம் மத்தூர் பகுதியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்றும் இப்பகுதியில் கள்ளச்சாராயம் குடிக்க வரும் குடிமகன்கள் இவ்வழியாக செல்லும் பெண்களை கேலி பேசுவதும் கிண்டல் அடிப்பதும் போன்ற சம்பவத்தில் மத்தூர் பொதுமக்கள் மற்றும் ஊர் பஞ்சாயத்தார் ஆகியோர்களும். சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத்திடம் புகார் அளித்தனர். இது குறித்து இன்று வரை ஒரு வெங்காயத்தையும் உரிக்க முடியாத சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் கல்லூரி மாணவன் வல்லவனிடம் தனது கையாலாகாத தனத்தை காட்டி தனது சப்_ இன்ஸ்பெக்டர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

 

பேரணாம்பட்டுச் சேர்ந்த கோட்டை காலனி, அம்பேத்கர் நகர், ஏரிக்குத்தி ,மத்தூர், லாலபேட்டை, கே.கே நகர் புதிய லைன் ,சிவராஜ் நகர் போன்ற பகுதிகளில் எல்லாம் கள்ளச்சாராமும், பத்திரப்பல்லி ,மசிகம், ஏரிகுத்தி, சின்னதாமல் செருவு, சாத்கர், டி.டி மோட்டூர் , போகலூர் அழிஞ்சு குப்பம், ராஜக்கல், எம். வி. குப்பம் ,மேல்பட்டி, போன்ற பகுதிகளில் உள்ள யுகேந்திரன் ,ஷங்கர் சரண்ராஜ் , மசிகம் முனுசாமி, ஏதுகுத்தி பாபு சாக்கர் பகுதியில் ஒன்றிய குழு தலைவர் லலிதாவின் மகன் சிலம்பரசன் யோவான் ,அன்வர் பாய் சின்னதாமல் செருவு ரஜினி ,ஆகியர்களால் மணல் கடத்தலும், தினமும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

 

இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் கப்பம் வாங்குவதில் மட்டும் ஆர்வத்தை காட்டும் சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் பொதுமக்களின் அழிவுக்குத்தான் வழிவகுக்குறாரே தவிர பொதுமக்களின் நன்மைக்காக ஒரு நல்லது கூட அவர் செய்யவில்லை என்று பேரணாம்பட்டு பொதுமக்களால் கூறப்படுகிறது. மேலும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் பற்றி மத்தூர் சமூக சீர்திருத்த பஞ்சாயத்து நிர்வாகிகள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் புகார் மனு அளித்தனர் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணனும் மத்தூர் பகுதியில் நாமே நேரில் வந்து கள்ளச்சாராயம் விற்பதை தடுத்து நிறுத்துகிறேன் என்றும் இனி மத்தூர் பகுதியில் கலாச்சாராயண விற்காத அளவிற்கு செய்துவிட்டு வருகிறேன்,

 

இப்படி சப்-இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை மெத்தனமாக செயல்பட்டால் பொதுமக்களை நிலைமை என்னவாகும் எனவே இது குறித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஐஜி அவர்கள் நேரில் ஆய்வு செய்து சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் குற்றவாளி என தெரியவரும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )