BREAKING NEWS

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மிட்டாய் விற்பனை செய்த கடையில் ஆய்வு-மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்கள் நலமுடன் வீடு திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்கோடு அருகே பாத்திமாபுரம் கல்பாறை பொற்றை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 பள்ளி மாணவர்கள் காலாவதியான சாக்லேட்டுகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்,

ஒரு மாணவரின் பிறந்தநாளுக்காக மிட்டாய் விநியோகிக்கப்பட்டுள்ளது,அந்த மாணவன் கொண்டு வந்த ,மூன்று மிட்டாய் பாக்கெட்டுகளில் ஒரு பாக்கெட் காலாவதியான மிட்டாய் இருந்ததாக தெரிகிறது,அந்த காலாவதியான மிட்டாய் சாப்பிட்ட 7 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்,

வாந்தி மற்றும் லேசான தலைச்சுற்றல் இருந்துள்ளது, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் பின்னர் தற்போது, 7 மாணவர்களும் நலமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மிட்டாய் கடைக்கு சென்று ஆய்வக சோதனைக்காக ஒரே சாக்லேட்டின் ஒரு மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர்,மேலும்

ஒருமுறை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,அதனை தொடர்ந்து பயன்படுத்தியதற்காக ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS