மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.
திருச்செந்தூரில் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்திற்கு விளம்பர பதாகை வைப்பதற்கு அளவு எடுத்தபோது மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரடி வீதியிலுள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ள தனியார் சிட்பண்ட்ஸில் விளம்பர பதாகை வைப்பதற்கு தொழிலாளி புவனேஸ்வரன் என்பவர் (38). இரண்டாவது மாடியில் ஏறி நின்று அளவுகோல் மூலம் அளவு எடுத்துள்ளார்.
அப்போது அளவுகோல் அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் தொழிலாளி புவனேஸ்வரன் மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவர் 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.